நீ போட்ட புள்ளியில்
நான் தொடுத்த கோடு
விதியின் சதுரங்க மையத்தில்.........
மாணவர் விசா
3 comments
எங்கள் ஊரிலே படித்து பல்கலைக்கழகம்(??) கிடைக்காதோரும்
படிப்பை தவிர்த்து பல் கலை(!!) கற்றோரும் மேற்படிப்பிற்காக எழுதும் பரீட்சை மாணவர் விசா இதில் சிலரைத் தவிர்த்து பலர் சித்தியடைந்து விடுவார்கள் அந்த சிலர் வங்கியில் பணம் போட்டு காட்ட முடியாதவர்கள்.
அந்த பலரில் சிலர் மட்டும் படித்து பட்டம் பெற வேண்டும் என்று சர்வதேச தகுதி வாய்ந்த(??)பல்கலைக்கழகம் செல்வோம். முதல் வருடம் பிரச்சனை இல்லாமல் போகும் ஏனென்றால் முதல் வருட கட்டுப்பணத்தை தகப்பன் கட்டியிருப்பான் அல்லது வெளிநாட்டிலிருப்பவர் திருப்பி தர வேண்டும் என்ற
உறுதி மொழியோடு கட்டியிருப்பார்.
அதற்குள் மாணவர் விசா விதிப்படி பகுதி நேர வேலையை எப்படியாவது எடுத்து விடுவோம் அல்லது தங்கியிருக்கும் வீட்டுக்காரர் எடுத்து தந்து விடுவார்
அப்படியென்றால் தான் வீட்டு வாடகைப்பணம் வாங்கலாம்.
அந்த ஒரு வருடத்திற்குள் படிப்பத்ற்கு ஒரு மடிக்கணணி ஊருக்கு கதைப்பதற்கு ஒரு கைத்தொலைபேசி நன்றாக ஆர்வத்துடன் படிக்க தொடங்குவோம்.
இரண்டாம் வருடம், அங்கே தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஏனென்றால் நாம் சர்வதேச மாணவர் அல்லவா? எமது ஒரு வருட பல்கலைக்கழக கட்டணத்தில் ஊரிலே ஒரு வீடே வாங்கலாம். யாரிடமும் பண உதவி கேட்க முடியாது.
ஆனால் வட்டிக்கு பணம் வாங்கலாம். அப்போ வட்டி கட்ட வேண்டும். அதற்கு உழைக்க வேண்டும். அதற்கு மாணவர் விசா விதியை மீற வேண்டும் அல்லது
கையில் பணத்திற்கு வேலை செய்ய வேண்டும் எங்கேயாவது குடியேற்ற எல்லை அதிகாரிகளிடம் மாட்டுவோமோ என்ற பயத்தில்,
இப்போ படிக்கிற நேரம் குறைந்து வேலை செய்யும் நேரம் கூடும் படிப்பில் ஆர்வம் குறையும்.
அதற்குள் பணம் தந்தவர் அவசரமாய் அதை கேட்கிறார் என்ன செய்வது படிப்பை விட்டு முழு நேரமும் வேலைதான். ஆக கிடைக்கிற நேரமெல்லாம் உழைக்க வேண்டியது தான் ஊரிலே இருப்பவர்களும் அடிக்கடி செலவுக்கு பணம் அனுப்ப கேட்பர் மறுக்கவும் முடியாது, பள்ளிக்கு போகவும் முடியாது.
அப்படியே சிறிது காலத்தில் மாணவர் விசாவும் முடிந்துவிடும் திரும்பி ஊருக்கும் போக முடியாது, விசாவை நீடிப்பு செய்ய பள்ளி போயிருக்க வேண்டும், அதனால் வேறொரு கல்லூரியில் மாணவராய் பதிந்து உண்மையான போலி பத்திரங்களை பணம் கொடுத்து செய்து விசா நீடிப்புக்கு கடவுச்சீட்டை அனுப்பினால் நான் பத்திரங்கள் செய்த பள்ளியை குடியேற்ற எல்லை அதிகாரிகள் போலி பள்ளி என மூடி எனது விசா நீடிப்பு அனுமதியை நிராகரித்து விட்டார்கள்.
அப்படியும் விக்கிரமாதித்தன் போல் முயற்சியை விடாது இன்னோர் கல்லூரியில் சேர்ந்து மீளவும் விசா நீடிப்பு அனுமதியை பெறுவதற்குள் போதுமென்றாகி விடும். இப்போது கடன் இரண்டு மடங்காகி விடும் சரி இனியாவது கடனை கட்டிவிட்டு படிப்போம் என்றால் வேலை செய்யும் போது கையும் களவுமாக குடியேற்ற எல்லை அதிகாரிகள் பிடித்து விட்டார்கள்.
இப்போது எனது விசா அனுமதியை ரத்து செய்து என்னை நாட்டுக்கு அனுப்ப போகிறார்கள். எனது எதிர்காலம் எனது கனவுகள் நொறுங்கிற்று. இது எனது பிழையா? அல்லது மாணவர் விசா தந்தவர் பிழையா? அல்லது வளர்ந்த நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியின் காரணமா? அல்லது முதலாளித்துவமா?

மனதினிலே விடையற்ற வினாக்களில் ஒர் வினா
0 comments
அவசர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலே உங்களுடன் ஓர் சில நிமிடம் மனம் திறக்க ஆவலாய் உள்ளேன். எம்மைச் சுற்றியுள்ள இந்தச் சமுதாயத்திற்காக நாம் வாழ்கின்றோமா? அன்றி எமக்காக இந்தச் சமுதாயாமா? இது என் மனதினிலே நீண்ட நாளாக விடையின்றிய தேடல்களில் ஓர் வினா.
நமது செயல்களினாலோ அல்லது அவற்றிற்கான காரணங்களினாலோ சமுதாயத்தின் தாக்கங்கள் நிச்சயமாய் நிதர்சனமாகிக் கொண்டுதான் இருக்கின்றது. இந்நிகழ்வானது தவிர்க்க முடியாததொன்று. நாம் எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்க்கும் ஓர் மன நிலையை எம்மை அறியாமலே அடைகின்றோம். பல சமயங்களில் எமது ஒப்பிடல் தராசுத்தட்டு நாம் எதனோடு அல்லது எவரோடு ஒப்பிட்டு பார்க்கின்றொமோ அந்தத் தட்டை விட மேலேயே நிற்கின்றது. இது எம்முடைய எதிர்பார்ப்புக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றது.
ஓர் சிறிய உதாரணத்தை எடுத்தோமானால் ஒரு பெண்ணோடு நகைக்கடைக்குப் போகின்றோம். உள்ளே நுழையும் போது என்ன வாங்கப் போகின்றோம் என்ற ஓரு தீர்மானத்துடன் தான் போவதாக எண்ணுகின்றோம். ஆனால் அந்தக் கடையை விட்டு வெளியேறும் போது முற்றிலும் வேறுபட்ட ஓர் பொருளுடன் அல்லது வேறு சில பொருள்களுடன் வெளி வருகின்றோம். உள்ளெ சென்றதற்கும், வெளியே வருவதற்கும் இடைப்பட்ட அந்த நேரத்தினிலே எமது மனத்தினிலே எதிர்பார்ப்பு, ஏமாற்றம்,ஒப்பிடுகை ஆகிய உணர்ச்சிகளுக்கிடையே ஓர் போராட்டம் நடக்கின்றது. இந்த உணர்ச்சிகளில் எது வெற்றி பெறுகின்றதோ அதன் விளைவே எமது கைகளில் இறுதியாக வாங்கிய அந்தப் பொருள்.
நம்மில் பலர் வாழ்க்கையிலே ஒரு கொள்கையைக் கொண்டிருப்பதாக எண்ணுகின்றோம். இது உண்மையிலேயே போலியான நம்பிக்கை. ஒரு இளைஞன் மிகவும் எளிமையாகவும் சிக்கனமாகவும்தனது வாழ்க்கையை நடத்துவேன் என்ற கொள்கையுடன் திருமண வாழ்வில் நுழைகின்றான். ஆனால் சமுதாயம் எனும் தண்டவாளத்தின் சீரற்ற நிலையினால் அவனது கொள்கை இரயில் தடம் புரளுகின்றது. குடும்பம் எனும் அன்பு வலை
சமுதாயம் எனும் புயல் காற்றின் உதவியுடன் அவனை இறுகப் பின்னி விடுகின்றது.
எளிமையான சிக்கன வாழ்க்கை என்ற அவனது கொள்கை அவனாலேயே தொலைந்து போகின்றது. அவனால் தேடப்பட்ட சொந்தங்களின் தாக்கங்களினால் அவனைச் சுற்றியுள்ள அவனது வாழ்க்கை முறை மாறுகின்றது. எதை அவசியமற்ற செலவுகள் என்று எண்ணினானோ அவை அவசியமாகின்றன. ஆக நமது வாழ்க்கையை நினைக்கும் போது சில யதார்த்தங்களை எமது மனம் உணர்ந்து கொள்ள மறுக்கின்றது. உண்மையிலே சமுதாயத்தின் தாக்கத்தின் விளைவுகள் வாழ்வின் பாதை
யையே மாற்றுகின்றது. ஆக மொத்ததில் கொள்கை என்பது கவர்ச்சியான வார்த்தை என்பதே உண்மை.
சமுதாயமின்றி நாமில்லை, நாமின்றி சமுதாயமில்லை என்னும் எண்ணக்கருவில் யார் யாரை நடத்திச் செல்கின்றார்கள் என்பது இன்றுவரை என் மனதினில் விடையற்ற வினாவாகவே இருக்கின்றது. இது வினாவாகவே கடந்து விடுமோ?............

Subscribe to:
Posts (Atom)