எங்கள் ஊரிலே படித்து பல்கலைக்கழகம்(??) கிடைக்காதோரும்
படிப்பை தவிர்த்து பல் கலை(!!) கற்றோரும் மேற்படிப்பிற்காக எழுதும் பரீட்சை மாணவர் விசா இதில் சிலரைத் தவிர்த்து பலர் சித்தியடைந்து விடுவார்கள் அந்த சிலர் வங்கியில் பணம் போட்டு காட்ட முடியாதவர்கள்.
அந்த பலரில் சிலர் மட்டும் படித்து பட்டம் பெற வேண்டும் என்று சர்வதேச தகுதி வாய்ந்த(??)பல்கலைக்கழகம் செல்வோம். முதல் வருடம் பிரச்சனை இல்லாமல் போகும் ஏனென்றால் முதல் வருட கட்டுப்பணத்தை தகப்பன் கட்டியிருப்பான் அல்லது வெளிநாட்டிலிருப்பவர் திருப்பி தர வேண்டும் என்ற
உறுதி மொழியோடு கட்டியிருப்பார்.
அதற்குள் மாணவர் விசா விதிப்படி பகுதி நேர வேலையை எப்படியாவது எடுத்து விடுவோம் அல்லது தங்கியிருக்கும் வீட்டுக்காரர் எடுத்து தந்து விடுவார்
அப்படியென்றால் தான் வீட்டு வாடகைப்பணம் வாங்கலாம்.
அந்த ஒரு வருடத்திற்குள் படிப்பத்ற்கு ஒரு மடிக்கணணி ஊருக்கு கதைப்பதற்கு ஒரு கைத்தொலைபேசி நன்றாக ஆர்வத்துடன் படிக்க தொடங்குவோம்.
இரண்டாம் வருடம், அங்கே தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஏனென்றால் நாம் சர்வதேச மாணவர் அல்லவா? எமது ஒரு வருட பல்கலைக்கழக கட்டணத்தில் ஊரிலே ஒரு வீடே வாங்கலாம். யாரிடமும் பண உதவி கேட்க முடியாது.
ஆனால் வட்டிக்கு பணம் வாங்கலாம். அப்போ வட்டி கட்ட வேண்டும். அதற்கு உழைக்க வேண்டும். அதற்கு மாணவர் விசா விதியை மீற வேண்டும் அல்லது
கையில் பணத்திற்கு வேலை செய்ய வேண்டும் எங்கேயாவது குடியேற்ற எல்லை அதிகாரிகளிடம் மாட்டுவோமோ என்ற பயத்தில்,
இப்போ படிக்கிற நேரம் குறைந்து வேலை செய்யும் நேரம் கூடும் படிப்பில் ஆர்வம் குறையும்.
அதற்குள் பணம் தந்தவர் அவசரமாய் அதை கேட்கிறார் என்ன செய்வது படிப்பை விட்டு முழு நேரமும் வேலைதான். ஆக கிடைக்கிற நேரமெல்லாம் உழைக்க வேண்டியது தான் ஊரிலே இருப்பவர்களும் அடிக்கடி செலவுக்கு பணம் அனுப்ப கேட்பர் மறுக்கவும் முடியாது, பள்ளிக்கு போகவும் முடியாது.
அப்படியே சிறிது காலத்தில் மாணவர் விசாவும் முடிந்துவிடும் திரும்பி ஊருக்கும் போக முடியாது, விசாவை நீடிப்பு செய்ய பள்ளி போயிருக்க வேண்டும், அதனால் வேறொரு கல்லூரியில் மாணவராய் பதிந்து உண்மையான போலி பத்திரங்களை பணம் கொடுத்து செய்து விசா நீடிப்புக்கு கடவுச்சீட்டை அனுப்பினால் நான் பத்திரங்கள் செய்த பள்ளியை குடியேற்ற எல்லை அதிகாரிகள் போலி பள்ளி என மூடி எனது விசா நீடிப்பு அனுமதியை நிராகரித்து விட்டார்கள்.
அப்படியும் விக்கிரமாதித்தன் போல் முயற்சியை விடாது இன்னோர் கல்லூரியில் சேர்ந்து மீளவும் விசா நீடிப்பு அனுமதியை பெறுவதற்குள் போதுமென்றாகி விடும். இப்போது கடன் இரண்டு மடங்காகி விடும் சரி இனியாவது கடனை கட்டிவிட்டு படிப்போம் என்றால் வேலை செய்யும் போது கையும் களவுமாக குடியேற்ற எல்லை அதிகாரிகள் பிடித்து விட்டார்கள்.
இப்போது எனது விசா அனுமதியை ரத்து செய்து என்னை நாட்டுக்கு அனுப்ப போகிறார்கள். எனது எதிர்காலம் எனது கனவுகள் நொறுங்கிற்று. இது எனது பிழையா? அல்லது மாணவர் விசா தந்தவர் பிழையா? அல்லது வளர்ந்த நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியின் காரணமா? அல்லது முதலாளித்துவமா?
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
annupavam pesukiratha?
congrates, this is happening here well said
பலரது அனுபவம் என் வார்த்தைகளாக.........
Post a Comment